KING JAMES BIBLEதேடு

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங் 125

அனைத்து · சங்தேடு

1யெகோவாவை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் மலையைப்போல் இருப்பார்கள்.

2மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருக்கிறதுபோல், யெகோவா இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார்.

3நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்களுடைய கைகளை நீட்டாதபடிக்கு, துன்மார்க்கத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சொத்தின்மேல் நிலைத்திருக்காது.

4யெகோவாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும்.

5தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் யெகோவா அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.

Sources and attribution